உங்கள் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் !

நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகள் இருப்பார்கள். குழந்தை செல்வங்கள் நமக்கு

By Fahad | Published: Apr 01 2020 01:34 AM

நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகள் இருப்பார்கள். குழந்தை செல்வங்கள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள் என்றே கூறலாம். குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதுமே சந்தோசமாக தான் இருக்கும். அந்த குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், அதனை பெற்றோர்களால் தாங்கி கொள்ள இயலாது. குழந்தைகள் எப்போதுமே திருப்தியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். தற்போது இந்த பதிவில் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி என்பது பற்றி பாப்போம்.

கண்ணை கவரும் பொருட்கள்

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அவர்களது கண்ணை கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

மசாலா அதிகம் உள்ள பொருட்கள்

மசாலா அதிகம் உள்ள பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதன் அவர்களின் உடல் நலத்திற்கு ஏற்றது அல்ல.

விருப்பப்பட்ட உணவுகள்

குழந்தைகள் விருப்பப்படுகிற உணவுகளை கொடுக்க முயல வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்க்காக குழந்தைகள் விரும்பாத உணவுகளை கொடுக்க கூடாது.

ஒரே உணவு

குழந்தைகளுக்கு ஒரே உணவை கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால், அந்த ஒரு உணவு மட்டுமே பிடித்தமானதாகவும், மற்ற உணவுகளில் விருப்பம் இல்லாமலும் போய்விடும். .

More News From baby care