மூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும்

By Rebekal | Published: Mar 28, 2020 08:34 AM

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால், முகத்தில் சில இடங்களில் அங்கங்கு கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது சிலரது முகத்தை வீணாக்கிவிடும். அதை நீக்குவதற்காக கம்பிகளை வைத்து சுரண்டி முகத்தை காயப்படுத்துவது விட சுலபமான வழிமுறை ஒன்று உள்ளது.

தேவையான பொருட்கள்

  • துளசி
  • தூதுவளை
  • நீர்

செய்முறை

ஒரு சட்டியில் துளசி மற்றும் தூதுவளையை குறைந்த அளவில் நீருடன் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். அதன் பின்பு கொதித்ததும் சட்டியை வைத்து துணியால் மூடிக்கொண்டு ஆவி பிடிக்கவும். ஆவி பிடித்த பின் சொரசொரப்பாக உள்ள டவலை வைத்து முகத்தை லேசாகத் தேய்க்கவும். உடனடியாக அந்த கொழுப்பு நீங்கி மூக்கு மற்றும் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

Step2: Place in ads Display sections

unicc