சினிமா துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

Do you want to achieve in the film industry? Here's a chance for you! Don't miss!

  • சினிமா துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு. 
  • சைக்கோ படக்குழுவின் அதிரடி முடிவு. 
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படக்குழு இணைந்து, சினிமா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பில், ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக உருவாக்க வேண்டும். அந்த குறும்படம் 2 நிமிட மட்டுமே ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இப்படம், வசனங்கள் ஏதும் இல்லாமல், சைகையும் இசையும் மட்டும் கொண்டு, கருத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் இந்த குறும்படத்தை #PsychoShortFilmContest  என்ற ஹாஸ்டேக்கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

An opportunity for those who want to achieve in the film industry. The End of Action by the Psycho Film Group. Directed by director Miskin, the movie Psycho is co-starring Udayanidhi Stalin, Nithya Menon, Aditi Rao and others. Ilayaraja has composed the film. The group has since been given an opportunity for aspiring filmmakers. In the announcement of the band, an actor and actress should work together to create a short film in psycho storytelling via mobile phone. The short film should only run for 2 minutes. The film should be made with no subtitles, only gestures and music, to make sense. The shorts are set to be released on Instagram by the hashtag #PsychoShortFilmContest by the 27th.