உடல் எடையை குறைக்க என்ன செய்தாலும் குறைய மாட்டிக்கிதுன்னு நினைக்கிறீங்களா….? இதோ நிரந்தரமாக உடல் எடையை குறைக்க சில வழிகள்….!!!

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. இந்த எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த பல மருத்துவங்கள் பார்த்தாலும் எடை குறையவில்லை என நினைத்து வேதனைப்படுபவர்களும் உண்டு. அவர்களுக்கு இது  ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். உடல் எடையை நிரந்தரமாக குறைக்க விரும்புபவர்கள் இந்த முறைகளை பின்பற்றி பாருங்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் :

Image result for தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் :

தினமும் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை என்றால் அதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்து செய்யலாம். உதாரணமாக, உங்களால் ஒரு 30 நிமிட அமர்வு தொடர்ந்து செய்ய முடியாது என்றால் மூன்று 10 நிமிட அமர்வுகளாக நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.

ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் :

Related image

ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான காலை வேலையை தொடங்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான காலை வேளையை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் தொடங்க வேண்டும். பாலாடைக்கட்டி அல்லது தயிர், பெர்ரி போன்றவற்றை சேர்க்கலாம். ஆரோக்கியமான காய்கறிகளான கீரை, குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி அல்லது வெங்காயம் போன்றவற்றுடன் ஆரம்பிக்கலாம்.

உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது :

Related image

பட்டினி கிடப்பதால், உங்களின் பசியின் தன்மை அதிகரிப்பதோடு அடுத்து சாப்பிடும் போது அதிக அளவில் உணவை சாப்பிட தோன்றும். ஒரு நாளில் குறைந்தது 3 ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். உயர் கொழுப்பு மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகள் உண்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இந்த வகையான கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உங்கள் வீட்டில் நீங்கள் வைக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

சுறு சுறுப்பாக இருக்க வேண்டும் :

Related image

ஒரு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை எடை இழப்பை ஊக்குவிப்பதோடு மற்றும் உங்கள் உடலை ஒரே மாதிரியாக பராமரிக்க உதவுகிறது. தினமும் ஒரு நடைபயிற்சியோ அல்லது ஒரு சைக்கிள் சவாரியோ செய்யலாம்.

மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் :

Image result for மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் :

மன அழுத்தத்தினால் நீங்கள் சாப்பிடும் அளவு அதிகரிக்கிறது. இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கிறது. எனவே மனா அழுத்தத்தில் இருந்து விலகியே இருங்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் சேர்ந்து தசை தளர்வு நுட்பங்கள், நல்ல சிரிப்பு, உடற்பயிற்சி ஆழ்ந்த சுவாசம் போன்ற நடவடிக்கைகள் முயற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.

வீட்டிலேயே சாப்பிட வேண்டும் :

Image result for வீட்டிலேயே சாப்பிட வேண்டும் :

நமது உணவு முறைகளால் தான், நமது உடலில் பல நோய்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகளில் சாப்பிடாமல் விலகி இருப்பது என்பது மிகவும் கடினமானது தான். ஆனால் நிரந்தரமாக எடை இழக்க வேண்டும் என்றால், நீங்கள் முடிந்தவரை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகளில் கட்டாயம் சாப்பிடாமல் விலகி இருக்க வேண்டும்.

நடைப்பயிற்சி:

Image result for நடைப்பயிற்சி:

நடைப்பயிற்சியை ஒரு முக்கியமான பயிற்சியாக கருத வேண்டும். இந்த பயிற்சியை நமது வாழ்வில் தினசரி இணைத்து கொள்ள வேண்டும். சாப்பிட்ட பிறகு குறைந்தது 10 நிமிடமாவது நடக்க வேண்டும். காலையில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment