குதிகால் வெடிப்பினால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்.

இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம்.

வெஜிடபில் ஆயில்

குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில வெஜிடபிள் ஆயிலை பூசி வந்தால், விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை நன்கு மசித்து கூழாக்கி, வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு

குதிகால் வெடிப்பு பிரச்சனை உள்ளவர்கள், வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்த பின் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குதிகால் வெடிப்பு நீங்கும்.

பேக்கிங் சோடா

தண்ணீரில் 3 மேசைக்கராண்டி பேக்கிங் சோடாவை கலந்து, தண்ணீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைத்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.