நீங்க சிப்ஸ் விரும்பி சாப்பிடுபவரா? அப்ப நீங்க கண்டிப்பா இதை படிங்க!

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி

By leena | Published: Jun 26, 2019 01:06 PM

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

கொழுப்பு

இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் காரணம். நமது உடலில் கொழுப்பு சத்துக்களை அதிகரிக்கக் கூடிய இந்த சிப்ஸ் போன்ற எண்ணெய் சாப்பாடுகளை சாப்பிடுவதால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.

சர்க்கரை

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று, சர்க்கரை நோய். இந்த நோய் நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல, மெல்ல கொல்லக் கூடிய நோய்களில் ஒன்று. இந்த சிப்ஸ் வகைகளை சாப்பிடுவதால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

பசி

சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் பசியை தூண்டக் கூடிய சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், நாமே நம்மை கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் நமது உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், உடல் எடையம் அதிகரிக்கிறது.

அல்சர்

நாம் உண்ணக்கூடிய சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதிகப்படியான கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. இதனால், நமது குடல்களில் புண் ஏற்பட்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Step2: Place in ads Display sections

unicc