தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா….?

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா….?

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது.

சத்துக்கள் :

Image result for வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.

இரத்த அழுத்தம் :

Image result for இரத்த அழுத்தம் :

வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இரத்த சோகை :

 

வாழைப்பழம் இரத்த சோகையை குணப்படுத்தக் கூடியது. வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புசத்து இருப்பதால், இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்து ஆகும்.

Related image

மேலும் இது நினைவாற்றலை தக்கவைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மது பழக்கம் :

 

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

Related image

 

வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவுகிறது.

வயிற்று பிரச்சனை :

Related image

வாழைப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்றுப்போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலை போக்கவும் அருமருந்தாக திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் பெண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது.

சளி :

Image result for சளி :

 

வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி தவிர்த்து விடுகிறோம். உண்மையில் பழம் சளியை தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது.

 

 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *