தர்பார் படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர்

By leena | Published: Jan 10, 2020 08:00 AM

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படம் வெளியானதையடுத்து, பலரும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, சமூக வலைதள பக்ககளிலும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தர்பார் படத்தை பார்த்து விட்டு, இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், நடை என அனைத்துமே சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc