நொச்சியின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரியுமா….?

நொச்சி செடி நாம் அனைவர்க்கும் தெரிந்த செடி தான். இந்த செடி பல மருத்துவ பயன்களை கொண்ட செடி. இந்த செடியில் பல மூலிகை குணங்கள் உள்ளது. இந்த செடி பல நோய்களை குணமாக்க கூடிய ஆற்றல் கொண்டது. நொச்சி தாவரம் முழுவதும் கார்ப்பு, துவர்ப்பு மற்றும் கார சுவைகள் கொண்டது.
பயன்கள் :
மூட்டுவலி :
Image result for மூட்டுவலி :
ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில், 1 கிராம் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வலிகள் நீங்கி பூரண சுகம் அடையலாம்.
புண்கள் குணமாக :
உடலில் புண் உள்ளவர்கள் நொச்சி இலையை அரிசி கஞ்சியில் அரைத்து, அந்த சாற்றை கொண்டு கழுவி வந்தால் புண்கள் குணமாகும்.
மண்டை நீரேற்றம் :
Image result for மண்டை நீரேற்றம்
மண்டையில் நீர் தங்கி இருப்பதால் தலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் கொதி நீரில் போட்டு வேது பிடிக்க மண்டை நீரேற்றம் நீங்கும்.
வாத நோய்கள் :
Image result for வாத நோய்கள்
கீழ் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்களுக்கு இந்த இலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment