குழந்தைகளின் ஊட்ட சத்து குறைபாடுகளை சரிசெய்யும் உணவு பொருட்கள் எவை தெரியுமா

குழந்தைகளின் ஊட்ட சத்து குறைபாடுகளை சரிசெய்யும் உணவு பொருட்கள் எவை தெரியுமா

குழந்தைகளை நாம் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்ற அளவிற்கு அவதிக்கு உள்ளாகிறோம். அவர்களை சாப்பிட வைப்பதற்கு ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நிகழ்ந்து விடும். மேலும்  உணவுகளை நாம் எவ்வாறு கொடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை  பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க முக்கிய காரணங்கள்:

 

சில குழந்தைகளுக்கு மாந்தம் பிடித்திருந்தாலும் அவர்கள் சரிவர சாப்பிடமாட்டார்கள். மாந்தம்  குணத்தை சரி செய்தால்  மட்டுமே சரி செய்யதால்தான் பசியெடுக்கும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கு  பயன்படுத்தினால் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து  மிளகு அளவு உருட்டி கொடுக்க இந்த மருந்து எப்பேர்பட்ட மாந்தத்தையும்  சரி செய்துவிடும்.

உணவு பிடிக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே குழந்தைகள் விரும்பும் உணவு வகைகளை நாம் சமைத்து கொடுத்தால் அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு ஊட்ட சத்து பானங்களை கொடுப்பதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.இதனை கொடுப்பதை நிறுத்தி விட்டால் குழந்தைகள் சரிவர சாப்பிடுவார்கள்.

அன்பு செலுத்துதல் மிகவும் சிறந்த கருவியாகும்.குழந்தைகளை சாப்பிட சொல்லி அடிப்பதை விட அவர்களை அரவணைத்து அன்புகாட்டி வேண்டுமானவற்றை செய்து கொடுப்பதால் அவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள்.

முட்டை :

முட்டை ஊட்ட சத்து குறைபட்டை போக்குவதில் பெரும்பங்கு வைக்கிறது. இதில் அதிகஅளவு புரதசத்து காணபடுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகும்.

கீரைகள்:

 

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகையில் இருந்து நமது குழந்தைகளை பாதுகாத்து கொள்ளலாம். எனவே கீரைகள் நமது குழந்தைகளின் கண் பார்வைக்கும் மிக சிறந்த அருமருந்தாகும்.

இதனை குழந்தைகள் சாப்பிடமறுத்தால் அவர்கள் விருப்பும் வகையில் செய்து கொடுத்து சாப்பிட வையுங்கள்.

 நவதானியங்கள் :

 

நவதானியங்கள் நமது குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகவும் அதிகமான சத்துக்களை தர வல்லது. கோதுமையில் புரதம் ,சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு ,கரோடீன், நியாசின் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே கோதுமையை குழந்தைகளின் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது.

கொண்டைக்கடலை, மொச்சை ,கொள்ளு ,கருப்பு உளுந்து, பாசிப்பயறு துவரை ஆகியவற்றில் தாது உப்புக்கள் , நார்ச்சத்து, கால்சிய, பாஸ்பரஸ் இரும்புச்சத்து, புரதம் என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே இவரை நமது குழந்தைகளுக்கு அன்றாடம் எதாவது ஒரு ஒன்றை உணவாக செய்து கொடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

பழங்கள் :

 

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தாது.

கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை  தினமும் தொடர்ந்து குழந்தைக்கு கொடுத்து வருவது மிகவும் சிறந்தது.

 

 

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *