விளாம்பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரியுமா?

விளாம்பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரியுமா?

பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்ட பழமும் அதிகம் கிடைக்காத பழமும் ஆகியது தான் விளாம்பழம். இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இங்கு அறியலாம்.

விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் உள்ளன. அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். தலை வலி, கண்பார்வை மங்கல், கை கால்களில் அதிக வேர்வை, என  பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய மூல மருந்து விளாம்பழம் தான்.

இது அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ண கூடிய தன்மை கொண்டது. முதியவர்களுக்கு பல்லை உறுதி செய்யக்கூடிய ஒரு தன்மையையும் இது கொண்டுள்ளது. அதுபோல கர்ப்பிணி பெண்களும் இந்த விளாம்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவுகிறது. மேலும் மலச்சிக்கலுக்கு இது சிறந்த தேர்வாக அமையும், இதில் உள்ள நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகளை போக்க உதவும், மேலும் பொட்டாசியம் நரம்பு தூண்டுதலுக்கும் தசை சுருக்கம் மற்றும் உடல் பிடிப்புகளை தடுக்க உதவுகிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய்மார்களில் நீரிழிவு உள்ளவர்கள் இதை உட்கொள்வது தவறு, ஏனென்றால் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது.

Latest Posts

வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்