அசத்தலான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான

By Fahad | Published: Apr 02 2020 04:03 PM

முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • திருக்கை மீன் - கால் கிலோ
  • பூண்டு - 10 பல்
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகாய் தூள் - முக்கால் மேசைக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
  • கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
  • எண்ணெய் - கால் கப்

செய்முறை

முதலில் திருக்கை மீனை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து  தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்க வேண்டும். அதன்பின் அதனுடன் சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின் திருக்கை மீனுடன் அரைத்த கலவையை சேர்த்து, நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். தோசைக்கல்லில் தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் 5 அல்லது 6 துண்டு மீன்களை போட்டு, இருபக்கமும் மாறி மாறி திருப்பி போட வேண்டும். மீன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான திருக்கை மீன் வறுவல் தயார்.

More News From thirukkai meen