சத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா?

நாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி

By Fahad | Published: Mar 28 2020 06:06 PM

நாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி உண்ணுகின்ற உணவுகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது இந்த பதிவில் சத்தான பயறு லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வறுத்த பயறு மாவு - 1 கப்
  • நாட்டு சர்க்கரை - 3/4 கப்
  • நெய் - 1/4 கப்
  • ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
  • முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் - சிறிதளவு

செய்முறை

முதலில் முழு பயறை வாணலியில் நல்ல வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின் அதனை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் நாட்டு சர்க்கரையை நன்கு பொடித்து இதனையுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம் பலம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இப்பொது சுவையான பயறு லட்டு தயார்.

More News From payaru lattu