சுவையான கொண்டக்கடலை வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

மாலை நேரத்தில் இந்த கொண்டக்கடலை வடையை செய்து சாப்பிட்டால் மியாகவும் நன்றாக இருக்கும்.இது தேநீருக்கு சிறந்தது.

தேவையான பொருட்கள் :

வெள்ளை (அ ) கருப்பு கொண்டக்கடலை – கப்

சின்ன வெங்காயம் – 1கப்

பச்சைமிளகாய் -2

காய்ந்த மிளகாய் -2

கொத்த மல்லி -சிறிதளவு

கறிவேப்பிலை -சிறிதளவு

பெருங்காயம் – சிறிதளவு

பூண்டு -2

இஞ்சி -சிறிதளவு

செய்முறை :

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த கொண்டக்கடலையுடன் மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி ,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் வெங்காயம் , பெருங்காயம் , கருவேப்பிலை ,கொத்த மல்லி சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த மாவை எடுத்து வடை போல் தட்டி போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.இப்போது மணமணக்கும் வடை ரெடி.