சுவையான ரவா சீடை செய்வது எப்படி தெரியுமா?

சுவையான ரவா சீடை செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்கிறோம்.அதிலும் நம்மில் அதிகமானோர் காலையிலும், மாலையிலும் டீ குடிக்கும் போது, ஏதாவது ஒரு உணவினை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது இந்த பதிவில், சுவையான ரவா சீடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ரவை – கால் கப்
  • பச்சரிசி – 2 கப்
  • ஜவ்வரிசி – அரை கப்
  • பச்சை மிளகாய் – 4
  • புளித்த தயிர் – 1 கப்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • எள் – 2
  •  உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி சற்று ஈரத்துடன் இருக்கும் போதே, மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். பின் இந்த மாவை வெறும் கடாயில் குறைந்த தீயில் வறுக்க வேண்டும். மாவை இறக்கி ஆற விட்டு நன்கு சலிக்க வேண்டும்.

அதன்பின் ஜவ்வரிசி, ரவையுடன் தயிர் சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். பின்பு சலித்த மாவுடன் அரைத்த மாவை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் ஆகியவற்றை அதோடு சேர்த்து பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான ரவா சீடை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube