அசத்தலான ராகி லட்டு செய்வது எப்படி தெரியுமா?

அசத்தலான ராகி லட்டு செய்வது எப்படி தெரியுமா?

லட்டுக்களில் பல வகையான லட்டுக்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே லட்டு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நம்மில் அதிகமானோர் கடைகளில் தான் லட்டுக்களை வாங்கி சாபபிடுவதுண்டு. ஆனால், என் உணவாக இருந்தாலும், நாமே செய்து சாப்பிடுவது தான் நல்லது.

தற்போது இந்த பதிவில், சுவையான ராகி லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ராகி மாவு – ஒரு கப்
  • பாதாம் – ஒரு கப்
  • கருப்பு எள் – 1 கப்
  • வேர்க்கடலை – ஒரு கப்
  • தேங்காய் – ஒரு கப்
  • கருப்பட்டி – கால் கப்

செய்முறை

கடாயில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். பின் வருத்தவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதனுடன் மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும் 2 சுற்றுகள் அரைக்க வேண்டும். கலவையை விரும்பும் அளவு உருண்டையாக பிடிக்க வேண்டும். உருண்டை வரவில்லையெனில், சிறிதளவு  பால் அல்லாது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது சுவையான ராகி லட்டு தயார். இதனையில் குழந்தைகளுக்கு மாலையில், தேநீருடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube