அசத்தலான குடைமிளகாய் கறி செய்வது எப்படி தெரியுமா?

Do you know how to make an original wedge curry?

நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.  காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • குடைமிளகாய் - ஒன்று
  • மிளகாய் வற்றல் - 3
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் குடைமிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிளகாய் வர்றளின் காம்பை கிள்ளி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து, பின் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும். ஒரு நிமிடம் பிரட்டிய பிறகு தட்டை வைத்து மூடி 4 நிமிடம் வேக வைக்க வேண்டும். மூடி வைத்தால் எளிதில் வெந்து விடும். பின் மிக்சியில், தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் 4 நிமிடம் கழித்து மூடியை திறந்து மீண்டும் ஒரு முறை கிளறி விட வேண்டும்.  5 நிமிடம் கழித்து திறந்து, நன்கு கிளறி காய் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை போடா வேண்டும். பின் நன்கு கிளறி மசாலா ஒன்றாக சேர்ந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான குடைமிளகாய் கறி தயார்.