“மெட்ராஸ் டே” எப்படி வந்தது தெரியுமா ? அதை பற்றி ஒரு பார்வை !

சென்னை நகரம் உருவாகி 379 வருடங்கள் ஆகிறது.கடந்த 2004 முதல் “மெட்ராஸ் டே” சென்னை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னப்பநாயக்கருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் ஐயப்ப நாயக்கர் இன்னொருவர் வெங்கடப்ப நாயக்கர். வெங்கடப்ப நாயக்கருக்கு சொந்தமான வங்கக் கடலோரம் இருந்த ஒரு சிறிய பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி ஆங்கிலேயே வணிகர் பிரான்சிஸ் டே வாங்கினார்.

அன்று அவர் வாங்கிய நாளை தான் இன்று சென்னை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய இடத்தில் பிரான்சிஸ் டே ஒரு கிடங்கு வைத்து அந்த கிடங்கில் வணிகம் செய்து வந்தார்.

அந்த இடம் தான் தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.தற்போது  தமிழக தலைமைச் செயலகமாக இயங்கி வருகிறது. பின் நாளில் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது.

பின்னர் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றது. இதை அடுத்து சென்னை தொழில் மற்றும் வணிக நகரமாக உருவெடுத்து தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக மாறியது.

அடுத்தடுத்து சென்னை வணிகம் , தொழில் மட்டுமல்லாமல் மருத்துவம், வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் , சினிமா, மென்பொருள் சேவை, என சென்னை மிக பெரிய வளர்ச்சி அடைந்தது. சென்னையில் குறிப்பாக வாகன தயாரிப்பு தேவையில் இந்தியாவின் டெட்ராயிடாக வலம் வருகிறது.

 

author avatar
murugan