டயட் இல்லாமல் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி நீங்கள் அறிவீரா !

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பாலரும்

By Priya | Published: Jul 24, 2019 02:16 PM

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பாலரும் பாதிக்க படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் டயட் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தற்போது டயட் இல்லாமல் உடல் எடையை இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பெர்ரி: 

உடல் எடை குறைப்பதில் பெர்ரி பழங்கள் பலவிதமான நன்மைகளை செய்கிறது. இந்த பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்து காணபடுகிறது. எனவே இது நமது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பெர்ரி பழங்கள் இல்லாத சமயத்தில் நாம் நாள்தோறும் திராட்சை பழங்களையும் உண்டு வரலாம்.

திராட்சை :

திராட்சை பழங்களில் மாவு சத்து ,வைட்டமின் டி மற்றும் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் காணப்படுகிறது. இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டோஃபு :

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கும் வைக்கிறது டோஃபு.இதனை நாம் தொடர்ந்து நமது உணவில் எடுத்து கொண்டு வந்தால் நமது உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடல் எடையை குறைக்கும். இதில் அதிக அளவு ப்ரோட்டீன் மற்றும் குறைந்த அளவில்  கலோரிகள் இருப்பதால் இது நமது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலிபிளவர் :

உடல் எடையை குறைப்பதில் காலிபிளவர் பல விதமான நன்மைகளை செய்கிறது.  இதனை நாம் தினமும் நம்முடைய உணவில் சேர்த்து  வந்தால் இது நமக்கு பல நன்மைகளை செய்யும்.இது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

ஆலிவ் எண்ணெய் :

நாம் சாப்பிடும் உணவுகளை ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுபாட்டிற்குள் இருப்பதோடு உடல் எடையும் குறையும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

தண்ணீர் :

  தண்ணீரை நாம் அதிகம் குடித்து வந்தால் இதனால்  நமது உடலில் இருக்கும் நீரின் அளவு குறைய வாய்ப்பில்லை.நீரின் அளவு குறைந்தால் தான்  நமது உடல் எடை அதிகரிக்கும். எனவே தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.            
Step2: Place in ads Display sections

unicc