உடல் எடையை குறைக்கணும்னு ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த கிழங்கை சாப்பிடுங்க!

நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான கிழங்கு வகைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து

By Fahad | Published: Apr 04 2020 11:36 PM

நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான கிழங்கு வகைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கிழங்குகளிலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்யத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் கருணைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

இதயம்

Image result for இதயம் கருணை கிழங்கில் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடல் எடை

Image result for உடல் எடை இன்று அதிகமானோரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். வாரத்திற்கு இரண்டு முறையாவது கருணை கிழங்கை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை நாம் கண்கூடாக காணலாம்.

மாதவிடாய் பிரச்னை

Related image பெண்களுக்கு ஏற்பாடாக் கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவதில் கருணை கிழங்கு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த சமயங்களில் பிரச்னை உள்ளவர்கள், தினமும் கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பசியின்மை

Image result for பசியின்மை நம்மில் சிலருக்கு பசியே எடுப்பதில்லை. பசியே எடுக்காமல், உணவு அருந்தாமல் இருப்பவர்கள் தொடர்ந்து கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால், பசியின்மையை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.