பெண்களே கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும் தெரியுமா?

பெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும். இன்றைய இளம்

By leena | Published: Apr 06, 2019 09:21 AM

  • பெண்கள் கூந்தலுக்கு எவ்வாறு எண்ணெய் பூச வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிக பெரிய பிரச்சனை என்று சொல்ல போனால், அது சரும பிரச்னை, கூந்தல் பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் வருவதற்கு, ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம்.

கூந்தல் பிரச்சனை

Image result for கூந்தல் பிரச்சனைபெண்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது கூந்தல் பிரச்னை தான். நாம் முடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறிந்து வைத்திருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்காது. அதை அறியாமல், நம்முடைய இஷ்டப்படி கெமிக்கல் கலந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை வாங்கி நமது தலைகளில் தேய்ப்பது தவறு. அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.   தற்போது நாம் இந்த பதில், பெண்கள் எவ்வாறு கூந்தலுக்கு எண்ணெய் பூச வேண்டும்  பார்ப்போம்.

வெளியில் செல்லும் போது எண்ணெய் தடவ வேண்டாம்

பெண்களுக்கு உள்ள கூந்தல் வகைகளில் இரண்டு வகைகள் உள்ளது.  எண்ணெய் பசை கூந்தல், மற்றோன்று வறட்சியான கூந்தல். இப்படிப்பட்ட எந்த வகையான கூந்தலை உடையவராக இருந்தாலும், நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, தலைக்கு எண்ணெய் தடவி விட்டு செல்லக் கூடாது. Image result for தலையில்  எண்ணெய் தடவ வேண்டாம் அப்படி எண்ணெய் தேய்த்து விட்டு சென்றால், நம்மை சுற்றி உள்ள சூழலில் உள்ள தூசு, அழுக்கு உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய்  அனைத்தும் சேர்த்து நமது தலையில்  பொடுகை உருவாக்கி விடும். எனவே வெளியில் செல்லும் போது, தலைக்கு எண்ணெய் தடவைக்கு கூடாது.

சருமம் மற்றும் கூந்தல்பாதிப்பு

நாம் கூந்தலில் எண்ணெய் தடவினால், எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின்பு தலையை அலசி குளித்து விட வேண்டும். இரவு எண்ணெய் வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளிக்கலாம் என்று எண்ணி இருப்பது தவறு. Image result for தலையில்  எண்ணெய் தடவ வேண்டாம் நாம் வெளியில் செல்லும் போது, கூந்தலில் எண்ணெயை தடவி விட்டு சென்றால், நாம் வெயிலில் செல்லும் போது, அது சூரிய வெப்பத்தை நேரடியாக ஈர்த்துக் கொள்ளும். அவ்வாறு ஈர்த்து எடுக்கப்படும், வெப்பம் சருமம் மற்றும் கூந்தலை அது பாதிக்கக் கூடும்.

இந்த பிரச்னை உள்ளவர்கள் இப்படி தான் எண்ணெய் பூச வேண்டும்

தினமும் நமது கூந்தலில் எண்ணெயை தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின்பு குளித்து வந்தால், அது நமது கூந்தலில் உள்ள தூசு மற்றும் அழுக்குகளை நீக்கிவிடும். Image result for சைனஸ், தலைவலி, சளி தொந்தரவு ஆனால், சைனஸ், தலைவலி, சளி தொந்தரவு உள்ளவர்கள், தினந்தோறும் இவ்வாறு செய்யாமல், வாரத்துக்கு இருமுறை 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

கூந்தல் ஆரோக்கியம்

Image result for கூந்தல் பிரச்சனை நமது கூந்தலை இவ்வாறு பராமரித்து வந்தால், அது நமது முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, சரும பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. எனவே, எப்போது, எப்படி கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால், கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும், அழகாகவும் இருக்கும்.
Step2: Place in ads Display sections

unicc