இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாக இதை செய்ங்க!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் நாம் நம் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து,  மேலை நாட்டு உணவுகளின் மீது அதிகமாக நாட்டம் செலுத்துவது தான் காரணமாக உள்ளது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கூட மரித்து விடுகின்றன. தற்போது இந்தப் பதிவில் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தூதுவளை காய்

தூதுவளை என்பது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த இலையின் காய்களை மோரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால்,  இதய சம்பந்தமான நோய்கள் குறையும்.

அத்தி பழம்

இதய சம்பந்தமான பலவீனங்கள் குணமாக அத்திப் பழங்களை நன்கு சுத்தம் செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து எடுத்து வைத்து,  ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை,  மாலை சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான பலவீனங்கள் குறையும்.

வெள்ளரி பிஞ்சு 

வெள்ளரிப் பிஞ்சுகள் நமது உடலில் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில் வெள்ளரிப் பிஞ்சுகளை அவை கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.