பொடுகு தொல்லையில் இருந்து மீண்டு வர இதை செய்யுங்கள்.!

பொடுகு தொல்லையில் இருந்து மீண்டு வர இதை செய்யுங்கள்.!

நமது தலையில் பொடுகு வர பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று விஷயங்களால் நமது தலையில் பொடுகு உற்பத்தி ஆகிறது. அதில் முதலில் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது.

அழுக்கு தலையுடன் இருப்பது மற்றும் தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தேங்கி அதனால் பொடுகு உருவாகிறது.இதனால் இந்தப் பொடுகை இயற்கை முறையில் எப்படி நீக்கலாம் என பார்க்கலாம்.

Image result for பொடுகு

வெந்தயத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும் .

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

பச்சை மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

வேப்பிலை கொழுந்து மற்றும்  துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்துவைத்து மறுநாள் அதை எடுத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.

முட்டை வெள்ளைக் கரு, தயிர் ,மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

author avatar
murugan
Join our channel google news Youtube