அட இப்படி ஒரு வேடமா? இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு

அட இப்படி ஒரு வேடமா? இரட்டை வேடத்தில் களமிறங்கும் யோகிபாபு

நடிகர் யோகிபாபு தனது திறமையான நடிப்பாலும், காமெடியான பேச்சாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். நகை சுவையாக நடிப்பதில், வடிவேலுக்கு அடுத்ததாக, தற்போது யோகிபாபு தான் கொடி கட்டி பறக்கிறார். யோகிபாபு கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியிலும், திரையுலகிலும் பிராபலமானார். தற்போது இவரது கைவசம் 16 படங்கள் உள்ளது. இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து வரும் டக்கர் படத்தில், யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக நடித்து வருகிறார். இதனையடுத்து யோகிபாபுவின் இரட்டை வேட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.