இப்பிடியுமா பண்ணுவாங்க! திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில்

By leena | Published: Jan 09, 2020 11:37 AM

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி, 2.0 மற்றும் காலா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர்  முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா தியேட்டரில், ரசிகர்கள் தர்பார் படம் பார்ப்பதற்காக மிகவும் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். ஆனால், இந்த தியேட்டரில் படம் திரையிடப்படாததால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், தியேட்டர் முன்பிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், ரசிகர்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc