கவலைப்படாதீங்க! உற்சாகமாக கொண்டாடுங்க! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் உலகநாயகன்!

Do not worry! Have fun! World leader who inspires fans!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து கிட்டத்தட்ட இறுதி நாட்களுக்குள் வந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் ஆகிய 4 பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது ஜெயிக்க போவது யாரு என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனையடுத்து, உலகநாயகன் கமலஹாசன் அவர்கள், எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ரசிகர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பதை அறிந்து கொள்ளும்  ஆவலுடன் இருக்கும் ரசிகர்களிடம், கவலைப்படாதீங்க, உற்சாகமாக கொண்டாடுங்கள் என கூறுகிறார்.