டிக்டாக் பயன்படுத்த கூடாது-அமெரிக்கா ராணுவ தலைமை ..!

தற்போது உள்ள ஆண்களையும் , பெண்களையும் அதிகம் கவர்ந்த உள்ள சமூக வலைதளங்களில் ஒன்றாக டிக்டாக் உள்ளது. இந்த செயலியில் பயன்படுத்தி நடனமாடுவது , பாட்டு பாடி தங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.
இந்த டிக்டாக் செயலி மூலம் பலர் நடிப்புத் திறமை மூலமாக சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து உள்ளது. சிலர் இந்த செயலுக்கு அடிமையாகவும் மாறிவிட்டன. அதிலும் சிலர் தங்களின் முழு நேரத்தையும் டிக்டாக்கில் செலவு செய்து வருகின்றனர்.
 
இதனால் அனைத்து துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ,அதிகாரிகள் வேலைகளில் கவனம் செலுத்தாமல் டிக்டாக்கில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ராணுவத் தலைமை அந்நாட்டில் இராணுவத்துக்கு ஒரு அறிக்கை அனுப்பியது.
அதில் அமெரிக்காவில் உள்ள ராணுவ வீரர்கள் தங்கள் பணியில் இருக்கும் போது அல்லது ராணுவ உடையில் இருக்கும்போது டிக்கெட் செயலியில் வீடியோ பதிவிட கூடாது என கூறியுள்ளது. இளம் ராணுவ வீரர்கள் சிலர் டிக்டாக்கில் ராணுவ உடையுடன் வீடியோ பதிவிட்டு அதையடுத்து இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
murugan