பதவி விலக வேண்டாம் ராகுல், தலைவராக தொடருங்கள்-மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.ஆனால் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகிவந்தது.

ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டியும் மறுப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.அதில், காங்கிரஸ் தலைவராக தொடருங்கள். தலைவர் பதவியைவிட்டு விலகவேண்டாம்’என்று  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment