இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம்! பிரபல நடிகர் அதிரடி!

Do not give me the name of Hindi film hero! Famous Actor Action!

டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சுருதி ராமசந்திரன், சாருஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹர் பெற்றுள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரே கதை இரண்டு முறை சொல்லப்படும்போது, அதில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்றும், காட்சிகளில் இருந்து எல்லாமே எனக்கு தெரிந்த விஷயம் என்பதால், அதில் ஆறுமாதம் செலவழிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

Actor Vijay Deverakonda, Rashmika, Suruthi Ramachandran and Saruhassan are in the movie Dior Comrade. The film is being made in Tamil and Telugu. Justin Prabhakaran has composed the film. In this case, Karan Johar has secured the Hindi remake of the film. Subsequently, the actor has been asked to cast Vijay Deverakonda in the Hindi remake of the film. He has denied this. Vijay Devarakonda says, "I want to be an actor. He has said that I do not want the name of Hindi film hero He also said that when the same story was told twice, I did not want to act in it, and that I did not want to spend six months in it because everything I know from the scenes.