நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர்-துரைமுருகன்

எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

எனவே நேற்று இரவு 11 மணி அளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை  சோதனை நடத்த சென்றனர்.ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அங்கே 4 மணி நேரமாக காத்திருந்தனர்.பின்னர் காட்பாடியில் உள்ள  துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை மற்றும் பறக்கும்படை மீண்டும் சென்றனர்.அதிகாலை சரியாக 3 மணி அளவில் சோதனை நடத்த சென்றனர். துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

Image result for துரைமுருகன் வீட்டில் சோதனை

அதேபோல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள்.சோதனைகுறித்து அதிகாரிகள் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

பின்னர்  வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர் என்று கூறினார்.

வேலூர் தொகுதியில் கதிர்ஆனந்தின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றும்  அதனை திசைதிருப்பவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது .தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..? என்றும்  போன மாதம் எங்கள் வீட்டிற்கு சோதனை நடத்த வந்திருக்கலாமே என்றும் தெரிவித்தார்.

எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையினரை விட்டு முதுகில் குத்துகின்றனர் என்றும்  சோதனை என்ற பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்த் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment