யாருடைய அன்பையும் அலட்சியப்படுத்தாதீர்கள்!

யாருடைய அன்பையும் அலட்சியப்படுத்தாதீர்கள்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் 

புன்கணீர் பூசல் தரும். 

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, உலகில் மனிதனாக பிறந்த யாராலுமே உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினை தாழ்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. ஒரு மனிதனை அன்பு என்னும் ஆயுதம் எல்லா விதத்திலும், அவனை நன்மையான வழியில் நடத்துகிறது.

அன்பிற்கு அடிமை

உலகில் எந்த மனிதனும், எதற்கு அடிமையாகாமல் இருந்தாலும், அன்பு என்னும் வார்த்தைக்கு அடிமையாகி தான் இருப்பார்கள். இந்த அன்பினால், எப்படிப்பட்ட முரட்டாட்டமான மனிதனையும், மிகவும் எளிதாக மாற்றி விடலாம்.

அன்பை அலட்சியப்படுத்துவத்தின் விளைவு

ஒருவர் நம்மிடம் அன்பு காட்டும் போது, அந்த அன்பை அற்பமாக எண்ணி அலட்சியப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று. ஒரு மனிதனை இவன் நல்லவன் அல்லாது கெட்டவன் என காட்டுவதற்கு நமது குணாதிசயங்களால் அல்ல, மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்து தான் அமைகிறது. அன்பு இல்லாதவன் கடவுளை அறிந்து கொள்வது மிகவும் கடினம். அன்பு என்னும் வார்த்தைக்குள் தான் எல்லாமே அடங்கி போகிறது. அலட்சியப்படுத்துவதன் விளைவு, அவர்களை மேலும் பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக்குவது மட்டுமல்லாமல், அவர்களது இருதயமும் கல்லான இதயமாக மாறி விடுகிறது.

அன்பை அள்ளி கொடுப்போம்

மனிதனாய் பிறந்த அனைவருக்குமே என்றோ ஒரு நாள் மரணம் நிச்சயம். நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவும் இல்லை. இறக்கும் போது எதையும் கொண்டு போவதும் இல்லை. வெறுமையாய் வந்த நாம், வெறுமையாக தான் மண்ணுக்கு திரும்ப போகிறோம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நாம் வாழ்கின்ற இந்த நாட்களில் மற்றவர்களிடம் இரக்கத்தோடும், அன்போடும் வாழ கற்றுக் கொள்வோம்.

Latest Posts

1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை