டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு -காவலர் சித்தாண்டி கைது

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள்

By Fahad | Published: Apr 08 2020 06:19 PM

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்ததை தொடர்ந்து தற்போது சித்தாண்டி கைது செய்யபப்ட்டுள்ளார்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. நடைபெற்ற விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகர் ஜெயக்குமார் குரூப் 4 மற்றும் குரூப்- 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே காவலர் சித்தாண்டி மற்றும் ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இதற்கு இடையில்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்ட சித்தாண்டி மீது  . கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்நிலையில் சிவகங்கையில் வைத்து சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.இவரை விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரியா மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோரை சிபிசிஐடி போலீசார்  தேடி வருகின்றனர்.  

Related Posts