டிஎன்பிஎஸ்சி முறைகேடு : தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் . 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் எதிர்கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும்.,அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் .