டிஎன்பிஎஸ்சி விவகாரம் :அரசு தலையிடுவதில்லை – முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில்,  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக  விவாதம் நடைபெற்றது. அப்பொழுது முதலமைச்சர்பழனிசாமி பேசுகையில் ,2006 – 2011 இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் நடந்தது என்ன என்பது  வெளியே வரும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.