டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - ஒரே நாளில் 4 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - ஒரே நாளில் 4 பேர் கைது

  • TNPSC |
  • Edited by venu |
  • 2020-02-08 20:23:14
 குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 2 அரசு பணியாளர்களை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் இருவரும் முறைகேடாக தேர்ச்சிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து  குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஸ்வரன், முசிறியை சேர்ந்த விஏஓ விமல்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மட்டும் தேர்வு முறைகேடு தொடர்பாக  சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.