இரு தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு -முடிவை மாற்ற ராமதாஸ் கோரிக்கை

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி முதனிலை & முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்த நிலையில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை விதித்தது  டிஎன்பிஎஸ்சி.குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும்  குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்படுகிறது என்று டிஎன்பிஎஸ் அறிவித்தது. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.


இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.