வேளாண் மண்டல மசோதாவை திமுக வரவேற்பு.! விடப்பட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான திமுக காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய திமுக தலைவர், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினர். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்