திமுக பெரும்பான்மையாக இருந்தும் அதிமுக வெற்றி.!

  • மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக திமுக 13 இடங்களையும்  , அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
  • இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில்  அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகளும் , திமுக வேட்பாளர் கலைவாணி 10 வாக்குகளும் பெற்றனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக திமுக 13 இடங்களையும்  , அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. இதை தொடர்ந்து இன்று  மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் கலைவாணி என்பவரும் , அதிமுக சார்பில் ஜெயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகளும் , திமுக வேட்பாளர் கலைவாணி 10 வாக்குகளும் பெற்றனர். இதனால் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்று உள்ளார்.

author avatar
murugan