திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 13 இடங்களில்

By Fahad | Published: Apr 06 2020 02:47 AM

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.மீதம் உள்ள  9 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.