தேர்தல் தேதி அறிவிப்பு! மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு!

தமிழகத்தில் புதிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி

By manikandan | Published: Dec 07, 2019 06:56 PM

  • தமிழகத்தில் புதிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. 
  • இதில் முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27யிலும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30யிலும் நடைபெற உள்ளது. 
  • உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக திமுக குற்றசாட்டு. 
  • திங்கள் கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உதயமான 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் இன்று தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 2020, ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னர் அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை கேட்க வேண்டும், வார்டு வரையறை இட ஒதுக்கீடு குறித்த முடிவுகளை எடுத்த பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.0000000000000000 இதன் காரணமாக திங்கள்கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சுதந்திர இந்தியாவில் தேர்தலை கேலிக்கூத்தாக்கி உள்ளனர்  அதிமுக அரசின் கை பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது தவிர வேறு வழியில்லை.  என திமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc