திமுக கோடீஸ்வர கட்சி,அதிமுக ஏழைகளின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக பணக்கார கட்சி, ஏழைகளின் கட்சி அல்ல. அதனால் தான் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சி.
உதயநிதி கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களின் சேவையை, மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.