#Breaking : திமுகவில் இணைந்தார் முதலமைச்சர் பழனிச்சாமியின் சகோதரர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகோதரர்  விஸ்வநாதன் திமுகவில் இணைந்துள்ளார். 

இன்று பாஜகவின் மாநில தலைவராக இருந்த அரசகுமார் அண்ணா அறிவாலயத்தில்   மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அரசகுமார்.இவரை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன்கள்  யுவராஜ், கார்த்திக் ஆகியோர்  இன்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார்.

அங்கு சென்ற அவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும் இவரது மகன்களையும் திமுகவில் இணைத்துக்கொண்டார்.தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியின்   பெரியம்மா மகன்  விஸ்வநாதன் என்பவர் குறிப்பிடத்தக்கது.