திமுக நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் மோசமான கட்சி.. நாங்கள் திமுகவை டெபாசிட் இழக்க வைப்போம்.. பங்காளிகளுக்கிடையே பகையா?.. அதிரவைக்கும் செய்தி..

  • சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் தற்போது அதிரடியாக கருத்தை தெரிவித்துள்ளனர்.
  • இந்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரிய அகழியையே ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து.

அவர்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது, ‘நீங்கள்  தேசிய கட்சி தானே வேண்டுமானால்,நீங்கள்  தனித்தே போட்டியிடலாமே’ என, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் ஏளனமாக பேசினார். நாங்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு விவகாரத்தில்  எங்களை நம்ப வைத்து, கழுத்தை அறுத்து விட்டனர். தி.மு.க கட்சி  மிகவும் மோசமான கட்சி. இது  பா.ஜ.,வுடன் கைகோர்க்க தயாராக  காத்திருக்கிறது. திமுக காங்கிரசை கழட்டி விட நேரம் பார்த்து காத்திருந்து, எனவே அந்த அறிக்கையை ஒரு சிறந்த காரனமாக  மாற்றி உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் குடும்பம், திராவிடர் கழகத்தை சேர்ந்த குடும்பம். அவர் சுயமரியாதைக்கு சொந்தக்காரர்.ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில், எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தன் பதவியை, ராஜினாமா செய்யவும், அவர் தயங்க மாட்டார் என்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்..அழகிரியின் அறிக்கை, திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை.

Image result for dmk congress

டில்லி மேலிடத்தின் ஒப்புதல் பெற்று,தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களின் உள்ள குமுறலை தான், அவர் வெளியிட்டார். அழகிரியின் அறிக்கையை, தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்று, ஆதரவு அளித்து வருகின்றனர். இதே போல் கடந்த  2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட்டு, தனித்து போட்டியிட்ட தி.மு.க., சில லோக்சபா தொகுதிகளில், ‘டிபாசிட்டை கூட பெறமுடியாமல் இழந்தது’. எனவே காங்கிரசுக்கு கூட்டணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தி.மு.க., இல்லை என்றால், அ.தி.மு.க., அல்லது பா.ம.க., அல்லது ரஜினி, கமல், தினகரன் போன்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, இனி நடக்க இருக்கும்  மாநகராட்சி உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சி  பிரிக்கும் ஓட்டுக்கள், தி.மு.க., வெற்றியை தடுத்து நிறுத்தி  அக்கட்சிக்கு தகுந்த  பாடம் புகட்டுவோம் என்று காட்டமாக கூறினர்.ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

author avatar
Kaliraj