திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில்

By venu | Published: Dec 02, 2019 04:13 PM

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.ஆனால் நடத்தவிடாமல் திமுகதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை தேர்தலில் எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக உட்கட்சிப் பூசலால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திமுகவிற்க்கு மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால் நாங்குநேரி விக்கிரவாண்டி இடை தேர்தல் படுதோல்வி அடைந்தது .உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நாமம் போடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc