சசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுப்பு.!

சசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுப்பு.!

சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  சசிகலாவிற்கு   சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

 இதனையடுத்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, நான் ஒரு விவசாயி, இது ஆனால் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின் தான் அதை விவசாயிகள் என்றும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். அந்த வகையில், சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுக நிலைப்பாடு குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ,முதலமைச்சர் இப்பொது இது குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என கூறி முதல்வர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube