வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் 477199 வாக்குகள் பெற்று  தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தேர்தலை பொறுத்த வரை திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை .கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்தார்.