செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக-  மு.க. ஸ்டாலின்

செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக  என்று 

By venu | Published: Aug 14, 2019 01:10 PM

செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக  என்று  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கேரள மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும்.செயல்படாமல் உள்ள மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது திமுக என்று கூறினார். மேலும்  முதலமைச்சர் நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் .அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்பாட்டில் இருப்பதால் நீலகிரி செல்ல முதல்வருக்கு நேரமிருக்காது என கருதுகிறேன்  என்றும் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc