நீட் வர  முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள்  திமுக காங்கிரஸ் தான்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நீட் மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  விளக்கம் அளித்துள்ளனர், அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் இல்லாத்தல் எதிர்கட்சியினர் இதனை கையெடுத்துள்ளனர். நீட் தேவையில்லை என்பது தன் எங்களுடைய நிலைப்பாடு,ஆனால் நீட் வர  முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள்  திமுக காங்கிரஸ் தான். முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது. தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை  என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலளிப்போம் .மேலும் நீதிமன்ற விவகாரம் குறித்து நான் பதிலளிக்க முடியாது.இருந்த போதிலும் பொண்மாணிக்கவேல் காவல்துறையில் பணியாற்றி உள்ளார் காவல் துறையை விமர்சிக்க கூடாது.

ஹைட்ரோ கார்பன், நீட்  கொண்டுவந்த்து காங்கிரஸ் திமுக தான்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு ஆகும்.

அஞ்சல் துறைக்கு தேர்வு ஆங்கிலத்திலும் ஹிந்திலும் மட்டும் எழுத முடியும் என்ற அறிவிப்பை தற்போது தன் கேள்விப்பட்டேன் அது குறித்து  தமிழக அரசு பேசி  நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.