வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் எம்.பி யாக பதவி ஏற்பு!

பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 5 ஆம் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமும், அவரை எதிர்த்து திமுக சார்பில் காதிர் ஆனந்தும் போட்டியிட்டனர்.
முதலில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்ததால் அதிமுக தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர். அதன் பின்பு சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் வந்தார். பின் இருவரும் மாற்றி மாற்றி முன்னிலை வகிக்க கடைசி நேரத்தில் யார் ஜெயிப்பார் என பரப்பரப்புடன் காணப்பட்டது அந்த தேர்தல் களம்.
ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தனக்கான வலுவான இடத்தை பிடித்துக்கொண்டார். அதன் பின்பு கணக்கெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் எம்பியாக பதவி ஏற்றுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

author avatar
Rebekal