தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு!முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது. தீபாவளி

By venu | Published: Jun 27, 2019 10:44 AM

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது. தீபாவளி என்றாலே அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.அந்த வகையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் விடுமுறையை எதிர்பார்த்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். அதற்கு முன்னதாக தாங்கள்பயணம் செய்ய பெரிதும்  மக்கள் நம்பியிருப்பது பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத்தான்.அதிலும் ரயிலில் பயணம் செய்தால் மிகவும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.மேலும் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ரயிலில் வசதிகள் இருக்கும்.அந்தவகையில் இந்த வருடமும் தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு 25ஆம் தேதி ஊருக்கு செல்பவருக்கு  ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.ஆனால்  முன்பதிவு தொடங்கிய சில  நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது .குறிப்பாக  நெல்லை, பாண்டியன், வைகை விரைவு ரயில்களில் முன்பதிவு மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கான முன்பதிவும் நிறைவு பெற்றுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc